குற்றமில்லை என்றறிந்தும்….
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:4.
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
குற்றம் இல்லை என்று தெரிந்தும்,
கொடுக்க மாட்டார் விடுதலை.
சுற்றம் கேட்கும் தீர்ப்பினையே,
சொல்லிச் சேர்ப்பார் கெடுதலை.
விற்றுச் செல்லும் நடுவர் இருப்பின்,
வீழ்ந்து விடுமே அத்துறை.
கற்றறிந்தோர்கள் தவறு திருத்தின்,
காண்பார் அவரில் திருமறை!
ஆமென்.