இறைவனைப் பழித்தாரா இயேசு?

இறைவனைப் பழித்தாரா இயேசு?
நற்செய்தி மாலை: மாற்கு 14:63-64.
“தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ‘ இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ‘ என்று கேட்க, அவர்கள் அனைவரும், ‘ இவன் சாக வேண்டியவன் ‘ என்று தீர்மானித்தார்கள்.”
நற்செய்தி மலர்:
இன்றையத் தலைவரின் தவற்றைச் சொன்னால்,
இந்திய எதிரி என விளிப்பார்!
அன்றைய நாட்களில் அறிவைச் சொன்னால்,
ஆண்டவர் எதிரி எனப் பழிப்பார்!
என்றும் மனிதர் இதைத்தான் செய்வார்;
எமாற்றித்தான் தமையழிப்பார்;
நன்றாய் எண்ணி நன்மை செய்வார்
நலிந்தவராயினும், இறை களிப்பார்!
ஆமென்.
Image may contain: one or more people and text

Leave a Reply