கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:54-56.
கிறித்துவில் வாழ்வு:
அச்சம் கொண்ட அடியார் அன்று,
ஆண்டவர் ஏசுவைக் கைவிடவே,
துச்சம் என்று துணிந்தோர் வந்து,
தூயனை அடக்கம் செய்திட்டார்.
மிச்சம் இருந்த பெண்கள் நின்று,
மீதிப் பணிகள் செய்திடவே,
பச்சைச் செடிகள் படர்ந்த காவில்,
பரனும் ஓய்வு எய்திட்டார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.