ஐயமுற்றவர் மனைவி எனினும்!

ஐயமுற்றவர் மனைவி எனினும்!
இறைவாக்கு: லூக்கா 1:24-25.

24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.

இறைவாழ்வு:

ஐயமுற்றவர் மனைவி என்றாலும்,
ஆண்டவர் அருள்தர மறுக்கவில்லை.
கையறு நிலையில் விழுபவர் எனினும்,
கனிந்து தாங்கவும் மறக்கவில்லை.
மெய்மையில்லாத ஊழியர் கண்டும்,
மேன்மை அளிக்கவும் குறைக்கவில்லை!
பொய்யென்று நானும் நம்பாதிருந்தேன்.
புனிதர் எனையும் வெறுக்கவில்லை!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply