கிறித்துவில் வாழ்வு:
மைந்தனின் பணியை மாண்புடன் முடித்தார்.
மறைநூல் வாக்காய் வாழ்ந்து படித்தார்.
தந்தவர் கைகளில் தன்னுயிர் கொடுத்தார்;
தரணியை மீட்கவே அதையும் விடுத்தார்.
நிந்தைச் சிலுவையும் மாற்றி அமைத்தார்.
நேர்ந்தத் தீங்கிலும் வெற்றி சமைத்தார்.
இந்த இயேசுவின் வழிவந்து நடப்பார்,
இனியமீட்புடன் இப்புவி கடப்பார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.