உண்டு குடித்து வாழாது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21: 34-36.
34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
உண்டு குடித்து உறங்கி எழுந்து,
உழைப்பின் பெயரில் ஏய்ப்பதுதான்
கண்டு பிடித்த பெருவாழ்வென்று,
கருதும் மனிதர் மாள்வாரே.
கொண்டு போகக் கூடாச் சொத்து,
கொடுக்கும் கவலை விட்டவராய்,
அண்டுகின்ற இறை வருகைக்கு,
ஆயத்தமாவார் வாழ்வாரே!
ஆமென்.