அழித்தல் பழித்தல் வேண்டாமே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.
54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். |
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, |
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். கிறித்துவில் வாழ்வு: பழித்திடும் மாந்தர் செயல் கண்டு, பகைத்திடும் பண்பு எனில் வந்தால், அழித்திடும் அவ்வகைப் பண்புகளை; அன்பில் வளர எனக்கிரங்கும். கொழித்திடும் தீயோர் நிலைகண்டு, கொடுமை செய்ய நானினைந்தால், மழித்திடும் பேயின் இருப்பிடத்தை; மன்னிப்பருளி எனிலிறங்கும்! ஆமென். |