இங்கே கொடுத்து அங்கே வாங்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:33-34.
33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. |
34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். கிறித்துவில் வாழ்வு: அங்கே வாங்கி, இங்கே கொடுக்கும், ஆண்டவர் விருப்பைப் புறக்கணித்து, இங்கே வாங்கி எதுவும் கொடாது, இழக்கின்றவரோ இன்னாட்டார். எங்கே சேர்த்தால் நிலைக்கும் என்னும், இறையறிவை உட்கொண்டு, பங்கம் இன்றி, பாங்காய்க் கொடுப்பின், பரத்திற்கவரே நன்வீட்டார்! ஆமென். |