இறுதித் தீர்ப்பு!
நற்செய்தி: யோவான் 5:26-27.
நல்வழி:
களையெடுக்கும் கடைசி நேரம்,
கண் முன்னில் தெரிகிறது.
விளைவெடுக்கும் முன்பதுவும்,
வெளியிடத்தில் எரிகிறது.
முளை தளிர்க்கும் மறைவாக்கும்,
முழு வடிவில் விரிகிறது.
தளை முறிக்கும் இறையருளும்,
தண்டனையில் புரிகிறது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.