காப்பவர் இறைவன்!
வாழ்வு:
என்னிடம் ஒருவர் சொன்னதுபோலே,
என் தலை போகலை கழுத்துமேலே.
இன்றின்னேரமும் அதே நிலையே;
இயேசுதானே என் தலையே!
முன்னவர் குறித்த நாளின் முன்பே,
முடிவு வருமோ? முடியாதன்பே!
நன்னாள் அந்நாள் இறைநாளென்றே,
நம்பி முடிப்போம் நற்பணி ஒன்றே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.