நல்வாழ்த்து:
இன்பம் கூட்டும் இறையைப் புகழ்வேன்,
இன்றும் கூடத்தான்.
துன்பம் கழிக்கும் அவர் செயல் புகழ்வேன்;
துயர்கள் மறையத்தான்!
இன்பம் கூட்டும் இறையைப் புகழ்வேன்,
இன்றும் கூடத்தான்.
துன்பம் கழிக்கும் அவர் செயல் புகழ்வேன்;
துயர்கள் மறையத்தான்!
நல்வாக்கு:
மத்தேயு 26:42.
“மீண்டும் சென்று, ‘ என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ‘ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”
நல்வாழ்வு:
குடித்து முடித்தால்தான்
குவளை அகலுமெனில்,
கொஞ்சமும் வையேன் நான்;
குவளைத் துன்பந்தான்.
மடிந்து போனால்தான்
மணிக்கதிர் பிறக்குமெனில்,
மடிவேன் நெல்லாய் நான்;
மாநிலம் மகிழத்தான்!
ஆமென்.