இன்றைய நற்செய்தி!

இன்றும் இறைவாக்கு கேட்போமா?

நல்வாழ்த்து:
உழைப்பில் நேர்மை இருக்குமென்றால்
உண்மையில் அதுதான் இறைவாழ்த்து.
பிழைகள் உணர்ந்து திருந்துவதுதான்
பெருமை சேர்க்கும் நல்வாழ்வு!
நல்வாக்கு:
மத்தேயு 25:31-33.
மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு:
 ”வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.”
நல்வாழ்வு:
ஆட்டு மந்தையைப் பிரிப்பது போன்று,
நாட்டு மக்களைப் பிரிப்பார் அன்று.
கூட்டிலெங்கும் குறையே இன்று;
காட்டும்போது கழுவிடும் நன்று!
ஆமென்.

Leave a Reply