ஆண்டவரும் ஆவியாரும்!
இறை மொழி: யோவான் 16:14-15. 14.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
இறை வழி:
கடந்து உள்ளில் இருக்கும் இறையை,
காட்டித் தருபவர் இறை ஆவியார்.
நடந்து நன்மை வழங்கிய மகனை,
நாளும் உரைப்பவர் இறை ஆவியார்.
கிடந்து அழுகிற மனிதரைத் தூக்கி,
கிறித்துவில் இணைப்பவர் ஆவியார்.
தொடர்ந்து அவரைப் பற்றிடுவார்க்கு,
துணையாய் இருப்பவர் ஆவியார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.