வேற்றுமைகள் இருந்தாலும்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:38-40.
“அப்பொழுது யோவான் இயேசுவிடம், ‘ போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ‘ என்றார். அதற்கு இயேசு கூறியது: ‘ தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
நற்செய்தி மலர்:
மாற்று அவையின் கிறித்தவரை,
மதிக்க மறக்கும் கிறித்தவரே,
நேற்று இப்படிப் பிரித்ததினால்,
நிகழ்ந்த தீமையும் அறிவீரே.
தோற்று போகும் அலகையவன்,
தொடுக்கும் அம்பு பிரிவாமே.
வேற்றுமைகள் இருந்தாலும்,
வேண்டும் அன்பு உறவாமே!
ஆமென்.