பிள்ளையைப் பார்த்துப் பயில்வோம்!

பிள்ளையைப் பார்த்து, கற்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:35-37.
“அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ‘ ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ‘ என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ‘ இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பிள்ளை நெஞ்சில் பெருமை இல்லை;
பேச்சு, செயலில் கருமை இல்லை.
கள்ளச் சிரிப்பு என்றும் இல்லை;
கயமையென்று ஒன்றும் இல்லை.
உள்ளம் இதுபோல் நம்மில் இல்லை;
உணராதிருக்க பொம்மை இல்லை.
பள்ளம் விழுந்தோம் எழும்பவில்லை;
பலநாள் படுக்க நாம், குழந்தையுமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

Leave a Reply