நற்செய்தி: யோவான் 5:23-24.
எவ்வழி நல்வழி என்றறியாது,
எழுந்து நடவா மனிதருக்கு,
செவ்வழி உன்வழி என்றறிவித்து,
செயலில் நடத்தும் இறை மகனே,
இவ்வழி தவிர வேறிலையென்று,
இனிதே செல்லும் புனிதருக்கு,
அவ்வழி சொல்லும் வாழ்வடைய,
அன்பு ஊற்றி, நிறை மகனே!
-ஆமென்.
-கெர்சோம் செல்லையா.