சினம் விடு இறைவன்!
நற்செய்தி: யோவான் 3:34-36.
நல்வாழ்வு:
இன்னில வாழ்வின் இறுதிக் கணக்கை,
இறைவன் கேட்கும் நாள் எதுவோ?
நன்மை, தீமை, உண்மை, பொய்மை,
நடுவர் அளக்கும் நூல் எதுவோ?
என்னில நெஞ்சில் இருக்கும் களையை,
இன்றே அரியும் வாள் எதுவோ?
சென்னையிலிருந்து சிறியன் கேட்டேன்;
சினம் விடு இறையின் தாள் எதுவோ?
ஆமென்.
-செல்லையா.