வேர்வை குருதியாகும்படியாய்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:43-44.
43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
கிறித்துவில் வாழ்வு:
கூர்மை ஆயுதம் குத்தும்போது,
குருதி எவ்விதம் வடிந்திடுமோ,
வேர்வை சிந்தி வேண்டியபோது,
வேந்தனில் அவ்விதம் படிந்ததுவே.
நேர்மை போதும் என்கிறபோது,
நிகழும் துன்பம் வருத்திடுமோ?
ஆர்வமாக வேண்டுதல் செய்வீர்;
ஆண்டவர் அருளும் பெருத்திடுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.