வேண்டல் ஒரு நாள்

 
வேண்டல் ஒரு நாள் கூடிவரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:5-7.
“யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
நீண்ட நாளின் விண்ணப்பம்,
நிறைவேறாது இருந்தாலும்,
ஆண்டவரின் நன்மக்கள்,
அண்டிக் கொள்வது அறமாகும்.
வேண்டல் ஒருநாள் கூடிவரும்;
விரும்பும் நன்மை தேடிவரும்.
தோண்டத் தோண்ட அருளூற்று,
தூயோர் வாழ்வில் உறவாகும்!
ஆமென்.

Leave a Reply