வெளிச்சம் பெற்ற விளக்கு!
நற்செய்தி : யோவான் 2:18-22.
நல்வழி:
எதை உரைத்தார் என்றறியாமல்,
எண்ணக் கதவைத் திறவாதீர்.
கதை அளப்பார் இறையறிவித்தால்,
காண்போர் நகைப்பார், மறவாதீர்.
புதை பொருளாய் மறைந்திருந்தாலும்,
புரிந்தோர் உண்டு, அளக்காதீர்.
விதை மரமாகும், வெளியே கனியும்;
வெளிச்சம் பெற்ற விளக்காவீர்!
ஆமென்.
-செல்லையா.