வெற்றி பெற்ற முதல்வரை வாழ்த்துவோம்!
குற்ற முரைத்தார் குழிகளில் வீழ,
கோட்டை பிடித்த முதல்வரே,
உற்றவர் இனிமேல், உமக்கு யார் யார்?
உண்மையில் ஏழை மனிதரே!
தொற்றுகள் போன்று, ஒட்டியே வருவார்,
தூய்மை வெறுக்கும் தரகரே.
பற்றினை என்றும், எளியரில் வைத்து,
பாரை ஆள்வீர் தலைவரே!
-கெர்சோம் செல்லையா
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டெரியட் காலனி,
சென்னை-600099.