நல்லவர்போன்று நம்மிடம் வருகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:19-20.
19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
20 அவர்கள் சமயம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
நல்லவர்போன்று நம்மிடம் வந்து,
நமது வாயைக் கிளறுகிறார்.
இல்லையுண்மை, இவரில் இல்லை;
இதை அறியாதார் உளறுகிறார்.
எல்லாமறிந்த இறையோ இன்று,
எச்சரிப்படையச் சொல்லுகிறார்.
சொல்லுமுன்னர் எண்ணுதல் நன்று;
செவிடர் தமையே கொல்லுகிறார்!
ஆமென்.