வஞ்சக நெஞ்சு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:5-8.
5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6 மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
பிஞ்சு குழந்தை போன்று நடித்து,
பெரிய விடைகள் தேடுகிறார்.
நஞ்சு கலந்த நெஞ்சு மறைத்து,
நயந்த வாக்கால் மூடுகிறார்.
பஞ்சு போன்று அவர் பறந்து,
பதில் பெறாது ஒடுகிறார்.
கெஞ்சு நிலையில் விழுகிறபோது,
கீழோர் கிறித்துவை நாடுகிறார்!
ஆமென்.