யாவரும் இணையெனப் பாரீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:33-34.
” அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ‘ வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ‘ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தன்னைப் பெரியவன் என்றே எண்ணித்
தவறாம் ஏணியில் ஏறுகின்றார்.
முன்னால் எழும்பும் ஏழையைத் துரத்தி,
முழுப் பகையாலே சீறுகின்றார்.
இன்னாள் இதையே சாதியென்றாக்கி,
ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றார்.
என்னாளாயினும் மாறா இறையோ,
யாவரும் இணையென அளக்கின்றார்!
ஆமென்.