யார் விருப்பு?

அடியார் விருப்பா? ஆண்டவர் விருப்பா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:33.
33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
பேதுரு யோவான் யாக்கோபன்று,
பெரிதாய் ஒன்றும் கேட்கவில்லை.
தூதுரை கொடுக்க, இடங்கள் மூன்று,
துவக்குதல் தவிர நாட்டமில்லை.
மூதுரை என்று பலர் நினைத்தாலும்,
முதலில் இறைவிருப்பது இல்லை.
ஏதிடம் ஏற்றது இயேசு அறிவார்;
இவர் விருப்பறிந்தால் தீதில்லை!
ஆமென்.

Leave a Reply