யார் புரட்டுவார் இந்தக் கல்லை?
நற்செய்தி மாலை: மாற்கு 16:1-4.
” ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள். ‘ கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்? ‘ என்று அவர்கள் ஒருவரோடு ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.”
நற்செய்தி மலர்:
இந்தக் கல்லை எடுத்துப்போட,
யார்தான் நமக்கு உதவிடுவார்?
எந்த நாட்டு ஏழை என்றாலும்,
இப்படித்தானே கதறுகிறார்.
அந்தக் கவலை இனிமேல் வேண்டாம்;
அடைத்தக் கல்லோ ஆங்கில்லை;
மைந்தனேசு உயிரோடெழுந்தார்;
மனிதா, உனக்கினி தீங்கில்லை!
ஆமென்.