அறிந்தோமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:54-57.
54பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். |
55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும். |
56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? |
57நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? கிறித்துவில் வாழ்வு: காற்றை அறிந்தோம்; கடலில், கரையில் சீற்றம் அறிந்தோம். தோற்றம் அறிந்தோம்; தொலை வானேறி மாற்றம் அறிந்தோம். ஏற்றம் அறிந்தோம்; ஏறும் மனிதரின் ஆற்றலும் அறிந்தோம். போற்றும் மனிதர் நாம்; பொய்யினின்று, மெய்அறிந்தோமா? ஆமென். |