மீட்கும் அறிவை வளர்போம்!
நமது அறிவியல் ஆய்வுகள் யாவும்,
நலிவினில் மீட்கப் பயன் தருதா?
சமருக்கான அணுகுண்டெல்லாம்,
சாவைத் தடுக்க உடன் வருதா?
எமது அறிவால் விண்கலம் விட்டோம்,
என்ற பெருமை வீண் விருதா!
அமைதியாக ஆழ்குழி பார்ப்போம்;
அவர்கள் என்ன மாடெருதா?
-கெர்சோம் செல்லையா.