மற்றவர் பற்று!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:18-19.
18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
உந்தன் பற்று உம்மை மீட்கும்;
உரைத்தார் இயேசு பலமுறை அன்று.
சொந்தப் பற்று தொய்யும்போது,
சொந்தம் வந்து தூக்குதல் உண்டு.
இந்தப் புலவன் மீட்பிற்கென்று,
இவனது பெற்றோர் ஏங்கியதுண்டு.
அந்தப் பற்றை ஏற்றுக்கொண்ட,
ஆண்டவரால்தான் வாழ்வு இன்று!
ஆமென்.
