மறைந்து போகிற வாழ்க்கை!
மறந்து போகிற மனிதக் குழுவில்,
மறையாதிருப்போர் ஒரு சிலரே.
திறந்து வைக்கிற அவரது வாழ்வில்,
தெரிகிற உண்மையும் ஒரு சிலவே.
பிறந்து இறந்து மறந்து போகிற,
பெருந்திரளில் மறையும் நாம்,
சிறந்து விளங்க, ஒன்று செய்வோம்.
சிறியருக்கிரங்க, மறையோம் நாம்!
-கெர்சோம் செல்லையா.