யூத இனத்தின் பெருமை!
நற்செய்தி: யோவான் 4:22
நல்வழி:
அறிவைத் தேடின கிரேக்கரென்றாலும்,
ஆற்றலில் உயர்ந்த உரோமரென்றாலும்,
வெறியுடன் எழுந்த வேற்றினத்தாளும்,
வியந்து எதனை யூதரில் கண்டார்?
நெறிமுறையான மறைவாக்குகளும்,
நேர்வழி சொன்ன இறைவாக்கினரும்,
புரிந்திட இயலா புனிதரின் மீட்பும்,
புவியோரடைந்தது யூதரில் என்பார்!
ஆமென்.
-செல்லையா.