இரக்கம் கொண்டவர் இறைவன்!
இறை வாக்கு: லூக்கா 1:59-63.
59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இறைவாழ்வு:
இரக்கம் கொண்டவர் இறைவன் என்று,
யோவான் பெயரில் கண்டோம் அன்று.
உரக்கச் சொல்வோம் நாமும் இன்று,
இறையின் அருளே வாழ்வில் நன்று.
அரக்கத் தன்மை கொண்டவர் கண்டு,
அதுவே சரியெனச் சொல்பவர் உண்டு.
முரடர் மூடர் கதைகள் கொண்டு,
முடிவு செய்வோர், மண்டு, மண்டு!
ஆமென்.