பொறுமையின் சின்னம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11-1-3.
“இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், ‘ ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ‘ என்று கேட்டால், ‘ இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ‘ எனச் சொல்லுங்கள் ″ என்றார்.”
நற்செய்தி மலர்:
பொறுமையின் சின்னம் கழுதையாகும்.
போர் வெறி கொள்வதோ குதிரையாகும்.
வெறுமையில் உழலும் எளியோர்க்குதவும்.
வேண்டாம் நம்மில் வெறித்தனம் எதுவும்.
அருமையாய் இதை எடுத்துக் கூறும்,
ஆண்டவர் செயல்கள் மாதிரியாகும்.
பெருமைகள் விட்டு உழைப்பவர் எவரும்,
பேரரசருக்கோ, பாதிரியாகும்!
ஆமென்.