பொய் துறப்போம்!
எத்தனை வகையாய்ப் பொய்யுரைத்தோம்?
எவ்வாறெல்லாம் அதை மறைத்தோம்?
அத்தனை செய்தும்,நேர்மை என்றோம்.
அறவழி அறியாதே சென்றோம்.
இத்தனைத் தவறுகள் இனி தொடர்ந்தால்,
எவரும் மதியார், இதை மறந்தோம்.
பித்தராய் வாழ்வை இழக்காது,
பேரருள் பெற்றிட, பொய் துறப்போம்!
-கெர்சோம் செல்லையா.
!