பெரும்பேறு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:28-30.
28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
உழைக்கும் பேறு, பெரும் பேறு.
உழியம் செய்வோரிடம் கூறு.
தழைக்கும் வாழ்வு தருவதுடன்,
தலைவராக்குவார், அரசேறு.
பிழைக்கும் பணியாய் எண்ணாது,
பேச்சுக் கலைபோல் பண்ணாது,
கழைக்கூத்தாடும் மனிதருக்கு,
காட்டு, செயலில் விண்தூது!
ஆமென்.