புளிப்பிலா வாழ்வு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:14-18.
14 வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18 தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
புளிப்பிலா வாழ்வைப் புவியோரடைய,
புளியா அப்பம் இயேசுண்டார்.
களிப்பிலா அடிமைகள் விடுதலையடைய,
கடவுப் பண்டிகைச் சாறுண்டார்.
ஒளித்திடயியலா உண்மையை விளம்ப,
உண்ணும் உணவைப் பகிர்ந்துண்டார்.
விளித்திடும் அவரது குரலைக் கேட்பார்,
விண்ணின் விருந்தில் பங்குண்பார்!
ஆமென்.