கருத்து வேறுபாட்டால் பிரிதல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:1-4.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, ‘ கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ‘ என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ‘ மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ‘ என்று கேட்டார். அவர்கள், ‘ மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ‘ என்று கூறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கருத்து வேறுபாட்டால் பிரிதல்,
கடவுளின் பிள்ளைக்கு முறைதானோ?
வெறுத்து ஒதுக்கி, விட்டுச் செல்லல்,
விவிலியம் கூறும் மறைதானோ?
ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்தல்,
உண்மைக் கிறித்தவம் தெரியீரோ?
பரத்தமையாலே விழுந்தவர் கோடி,
பண்பின் வாழ்வைத் தெரிவீரோ?
ஆமென்.