பார்க்க வேண்டும்!

பார்க்கவேண்டும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:39-41.

39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:41 நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஊர் உலகென்றுச் சுற்றித் திரிந்து,

ஒரே இனமாய்ப் பார்க்க வேண்டும்.

யார் நீ என்ற எதிர்ப்பிலும் புரிந்து,

என்னை உறவாய்ப் பார்க்க வேண்டும்.

நார் நாராக நைந்தோர்க்கென்று,

நற்பணி செய்துப் பார்க்கவேண்டும்.

நேர்மை என்ற இறையைக் கண்டு,

நெஞ்சிலிருத்திப் பார்க்க வேண்டும்!

ஆமென்.

Leave a Reply