கண்ணில்லார் யார்?

கண்ணில்லார் யார்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:35-38.

35  பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36  ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.

37  நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.

38  முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

விண்ணில் ஏறி, விரைந்து இறங்கும்,

வித்தை கற்ற நம்மவர்க்கு,

கண்ணில்லாமல் தவிப்போர் நெஞ்சில்,

கரையும் கண்ணீர் தெரியலையே!

எண்ணிக்கையில் குறைந்தோர் இவரின்,

ஏக்கம் தீர்க்கும் வழிமுறைகள்,

பண்ணும் எவரும் நன்மை காண்பார்;

படைப்பின் புதிரும் புரியலையே!

ஆமென்.

Leave a Reply