பழிவாங்குவார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:49-51.
49ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; |
50ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. |
51நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். கிறித்துவில் வாழ்வு: அறிவின் வாக்கு உரைத்தவரை, அடித்துக் கொன்றதும் நம் நாடு. வெறியின் செயல்கள் செய்தவரை விழுந்து புகழ்வதும் பண்பாடு. பொறியில் சிக்கிய வெறியர்களை, புனிதம் என்பதோ பெருங்கேடு. நெறியின் இறைவன் பதில் தருவார். நேர்மைதானே அவர் கோடு! ஆமென். |