நிலை நாட்டுகிறீர்!
கிறித்துவின் வாக்கு:
லூக்கா 13:6-9.
6அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. |
7அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். |
8அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், |
9கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். கிறித்துவில் வாழ்வு: கனியற்ற பாழ்மரமாக இருந்தும், கனிவுடன் ஆண்டுகள் நீட்டுகிறீர். இனிமேலாவது பயன் தருவேனென, எனது நாளையும் கூட்டுகிறீர். தனியனாய் என்னால் இயலாதென்றும், தலையினுள் அறிவு ஊட்டுகிறீர். பனிமழை, மண்வளம், உமது அருளே; பணிவோரை நிலை நாட்டுகிறீர்! ஆமென். |