பன்னிருவரில் ஒருவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6: 14-16.
14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
கிறித்துவில் வாழ்வு:
இகம் மீட்க இறங்கிவந்த இறைவனவர்
ஈராறில் யூதாசை ஏன் இணைத்தார்?
அகம் பார்த்து முடிவெடுக்கும் அறிவு அவர்,
அடியானாய் அவனை ஏன் அணைத்தார்?
நுகமாகிச் சுமையாக இருக்கும் நாமும்,
நோகடித்தும் உயிரீந்து ஏன் காத்தார்?
நகம்போல விரலை நாம் காப்போம் என்று,
நம்பித்தான் யாவரையும் விட்டுவைத்தார்!
ஆமென்.
