நற்றமிழை நாம் அழித்தோம்!

​நற்றமிழை நாம் அழித்தோம்!

நாற்றம் எனும் நறுமணத்தை
நாம் இன்று இழந்தோம்.
தூற்றுகின்ற சொல்லாக்கித்
தூய மயிர் களைந்தோம்.
ஏற்ற பொருள் சேரியினை
இழிவாக்கிப் பழித்தோம்.
மாற்றம் என நாம் நம்பி,
மயக்கு தமிழ் அழித்தோம்!
-கெர்சோம் செல்லையா.
பி.கு:
நாற்றம் = நறுமணம் (நாத்தம் அல்ல!)
மயிர் = முடி
சேரி = சேர்ந்து வாழும் இடம்

Leave a Reply