நம்மைவிடவும் நேர்மையுள்ளோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:1-3.
1பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். |
2இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? |
3அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். கிறித்துவில் வாழ்வு: நம்மை விடவும் நேர்மையுள்ளோர், நமக்கு முன்பே விடை பெற்றார். இம்மை வாழ்வு இலைமேல் தண்ணீர்; என்றுகூறியே கடை விற்றார். செம்மை வாழ்வு இறையால் பெறுவார், செல்லுமிடத்தை நன்கறிவார். அம்மாப் பெரிய அருளடைவதினால், ஆண்டவருடனே இங்குறைவார்! ஆமென். |