இல்லாமையிலும் நன்றி!
நற்செய்தி மாலை: மாற்கு 8:4-6.
“அதற்கு அவருடைய சீடர்கள், ‘ இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி? ‘ என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, ‘ உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன? ‘ என்று கேட்டார். அவர்கள் ‘ ஏழு ‘ என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.”
நற்செய்தி மலர்:
இல்லாமையிலும் நன்றி;
எடுத்துக் காட்டு இயேசு.
எல்லாமிருந்தும் குன்றி,
இழந்த நெஞ்சே பேசு!
நல்லோர் உயர்வின் ஏது
நன்றி நிறைந்த நெஞ்சு.
கல்லாதிருப்பது தீது;
கயமை அகலக் கெஞ்சு!
ஆமென்.