நட்பு

நட்பின் நாள் வாழ்த்து!

மாற்று சமய மனிதரையும்
மதித்துத் தம்முடன் சேர்ப்போர் யார்?

நேற்று வெறுத்து விட்டதினால்
நிகழ்ந்த பிளவைப் பார்ப்போர் யார்?

காற்று, மழை நீர், நெருப்பாக,
கடவுளின் இணைப்பைக் கோர்ப்போர் யார்?

தூற்றுவோரும் பின்வருவார்;
தூய அன்பை வார்ப்போர் யார்?

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

Leave a Reply