நட்பாய் மாறும் நயவஞ்சகர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:10-12.
10 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.11 அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.12 முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
எதிரியின் எதிரி நட்பாகும்,
ஏய்ப்பார் மிகுந்த அந்நாட்டில்,
அதுவரைப் பகையாய் இருந்தவர்கள்,
அறையும் முடிவில் ஒன்றிணைந்தார்.
சதுரங்கமாடியே கழுத்தறுக்கும்,
சதிப்பார் மிகுந்த இந்நாட்டில்,
விதியால் வந்தது என்னாமல்,
விண்முடிவில் யார் ஒன்றிணைவார்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.