திருந்துவோமா?
பிள்ளை செய்யும் பிழைகள் கண்டு,
பெற்றோர் நெஞ்சம் வருந்தாதோ?
கொள்ளை போகும் மனிதம் கண்டு,
கொஞ்சும் இறையும் வருந்தாரோ?
வெள்ளம் போன்று வடியும் முன்பு,
வீணாம் வாழ்வும் திருந்தாதோ?
உள்ளம் உணர உண்மை முன்பு,
ஒவ்வொரு மனிதரும் திருந்தாரோ?
-செல்லையா.