திருந்துதலே விருந்து!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:30-31.
கிறித்துவில் வாழ்வு:
விருந்தினரென்று வீட்டில் வந்து,
விருந்தளிப்பவர் இயேசு.
இருந்துமில்லா கண்கள் திறந்து,
இறைவன் முன்பு பேசு.
வருந்திச்சேர்த்தும் பயன் தராது,
வாழ்வளியா காசு.
திருந்துதல்தான் விருந்து இன்று;
தேவையற்றவை வீசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.