தன்னைக் கெடுத்து யாவும் பெறுதல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:25.
25 | மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? கிறித்துவில் வாழ்வு: ஊரை மடக்கி, உலையில் போட்டும், உண்ண ஒருசிறு பருக்கையில்லை. பாரை அளந்து, பக்கம் வைத்தும், பாங்காய் அமரவும் இருக்கையில்லை. வேரை வெட்டி, மரத்தினை நாட்டும், வீண் செயலெல்லாம் வளர்ச்சியில்லை. தேரை உண்ணும் பாறைக்குள்ளும், தெய்வம் தரவே, தளர்ச்சியில்லை! ஆமென். |